வேலை வாய்ப்பு

எஸ்சி, எஸ்டி பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: திறன் பயிற்சி தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரசின் சார்பில் வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கல்லூரிகளில் இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகள் பெற மொழித்திறன், திறனறிவு மற்றும் குழு விவாதம் குறித்த பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு அந்த மாணவர்களுக்கு திறன்சார் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திறன் பயிற்சிகள் தாட்கோ சார்பில் வழங்கப்பட வுள்ளது. இணையதளத்தில் பதிவு தகுதியான மாணவர்கள் சாதிச்சான்று, ஆதார் அட்டை,பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், கடைசி பருவத் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றுடன் http://tahdco.com/ என்ற இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட ஆவணங்களை பதிவு செய்வதற்கு அனைத்து கல்லூரி முதல்வர்களும் தங்கள் மாணவர்களுக்கு உதவ வேண்டும். மேலும் பதிவு செய்த மாணவர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT