சென்னை: அக்னிபாதை திட்டத்தின்கீழ், இந்திய விமானப் படையில் அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. குறைந்தபட்ச வயது 17.5 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடத்துடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு ஆன்லைன் மூலம் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மே 20-ம் தேதி ஆன்லைன் மூலமாக நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம்.