சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து மார்ச் 24-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமைநடத்த உள்ளன.
இந்த முகாம், கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது.
இதில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரைபயின்ற அனைவரும் கலந்து கொள்ளலாம். 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுவோர் மற்றும் வேலைஅளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும்.