வேலை வாய்ப்பு

வேலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை (17-ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்று வருகிறது. அதன்படி, நாளை காலை 10 மணியளவில் முகாம் நடைபெற உள்ளது.

இதில், 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். முகாமில் 10-ம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். தகுதியுள்ள நபர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம். வேலைவாய்ப்பு பெறுபவர் களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT