திருப்பத்தூர்: கந்திலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 17-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் சிறிய அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. கந்திலியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்குபெறவுள்ளன.
இதில், மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் சார்ந்த டிப்ளமோ, ஐ.டிஐ., முடித்த ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்’’ என தெரிவித் துள்ளார்.