வேலை வாய்ப்பு

சென்னையில் கைடுஹவுஸ் கிளை திறப்பு - 2,000 பேருக்கு வேலை வழங்க திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் புதிய கிளையை திறந்துள்ள கைடுஹவுஸ், 2,000 பேருக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனமான கைடுஹவுஸ் சென்னையில் கடந்த 13-ம் தேதி கிளையை திறந்துள்ளது. ராமானுஜன் ஐ.டி.சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இந்த கிளையை கைடுஹவுஸ் இந்தியா தலைவர் மஹேந்திர சிங் ராவத் மற்றும் சிஓஓ சார்லஸ் பியர்டு தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து சிஓஓ சார்லஸ்பியர்டு கூறும்போது, “இந்தியாமுழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றநோக்கத்தில் இங்கு கிளையைதிறந்துள்ளோம். பல்வேறு தொழில்களுக்கு தேவையானவர்கள் சென்னையில் இருப்பதால் இந்த நகரை தேர்வு செய்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் ஊழியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் நாடு முழுவதும் பல நகரங்களில் அலுவலகங்களை திறக்க உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT