வேலை வாய்ப்பு

அறங்காவலர்கள் நியமனம்: தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, தகுதிவாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் www.hrce.tn.gov.in இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பமும், மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது. பொதுமக்கள் அதை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்து, தகுந்த ஆதாரங்கள், ஆவணங்களுடன் மீண்டும் அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், கோட்ட உதவி ஆணையர்களால் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். மேற்கண்ட ஆணையர் அலுவலகங்களில் இருந்து விண்ணப்பத்தை நேரில் பெற்றும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT