வேலை வாய்ப்பு

கல்வி அதிகாரி பணிக்கு ஏப்.9-ல் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 11 மாவட்டக் கல்வி அதிகாரி (டிஇஓ) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

முதுநிலை பட்டப் படிப்புடன் பி.எட். முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டியது அவசியம். இதற்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

இப்பணிக்கு 2 கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி நடத்தப்படும்.

தகுதியான பட்டதாரிகள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஜனவரி 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல்விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT