வேலை வாய்ப்பு

ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ராணுவ நலன் வேலை வாய்ப்பு மையம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம், வரும் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில், இளங்கலை அல்லது முதுகலையில் அனைத்து பாட பிரிவுகளில் பட்டம் பெற்ற ராணுவ வீரர்களின் பிள்ளைகள் பங்கேற்கலாம். அத்துடன், 2023-ம் ஆண்டு பட்டப் படிப்பு இறுதியாண்டு முடிப்பவர்களும், முன்னாள் ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகள் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் 15 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சைனிக் இன்ஸ்டிடியூட்டில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT