வேலை வாய்ப்பு

ஐஐடியில் 445 பேருக்கு வேலைவாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதலாவது வேலைவாய்ப்பு முகாம், நேற்று நடந்தது. முதலாவது நாளின் முடிவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 445 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டில் 407 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்ற நிலையில், இந்த ஆண்டு 10 சதவீதம் பேர் அதிகமாக பெற்றுள்ளனர். இதில் 25 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

நான்கு நிறுவனங்களின் மூலம், மொத்தம் 15 மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த 1,722 மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவு செய்திருந்தனர். இதில் பங்கேற்க மொத்தம் 331 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அவர்கள் 722 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT