வேலை வாய்ப்பு

மதுரையில் வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் கா.சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை கோ.புதூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ.25) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT