வேலை வாய்ப்பு

விழுப்புரத்தில் நாளை பெண்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (15-ம் தேதி) நடைபெறுகிறது. விழுப்புரம், டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை காலை 9 மணிக்கு முகாம் நடைபெற உள்ளது. 2020, 2021 மற்றும் 2022- ம் கல்வி ஆண்டில், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள், வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் தகுதி வாய்ந்த பெண்களை தேர்வு செய்ய உள்ளது. தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி யும், மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு,தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி,பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளுடன் கூடிய நிரந்தர பணி நியமனமும் இந்நிறுவ னத்தால் வழங்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் மோகன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT