வேலை வாய்ப்பு

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி மற்றும் கலவை ஆகிய வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு நேர்காணல் மூலமாக, இடஒதுக்கீடு முறையில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ராணிப் பேட்டையில் நிரந்தரமாக வசிப்பவராகவும், குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சமாக பொதுபிரிவினருக்கு 32வயதும், இதர பிரிவினருக்கு 37வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்தும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களை இ்ன்று (10-ம்தேதி) முதல் http://ranipet.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவல கங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாக வரும் நவம்பர் மாதம் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள்ளாக அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT