புழல் மத்திய சிறை 1-ல் காலியாக உள்ள சமூக வழக்குசேவைநிபுணர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் சமூகப் பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், வளர்பருவக் கல்வி ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது சமூகப் பணி, சமூக சேவை, சமூகஅறிவியல், குற்றவியல், சமூகவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவது ஒரு பட்டப் படிப்புடன் சமூகப் பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பட்டயப் படிப்பும் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயதுக்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் 35 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை வரும் அக்.7-ம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1,புழல், சென்னை-66 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-26590615, 9952191206 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.