அஞ்சலக ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக செய்ய நேரடி முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆர்வமுள்ள, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித் தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் வரும் 17ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், மத்திய கோட்டம் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். படித்து விட்டு, வேலைவாய்ப்பு இல்லாத, சுயவேலை செய்யும் இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள். சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனையில் அனுபவம், கணினி அறிவு, உள்ளூர் பற்றிய அறிவுத் திறன் ஆகியவை கூடுதல் தகுதிகளாகக் கருதப்படும்.
மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்வோர், இந்த முகவர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி கிடையாது. நேர்முகத் தேர்வு வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். தகுதி உள்ள நபர்கள் மூன்று பாஸ்போர்ட் புகைப்படம், வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் வரவேண்டும்.
நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் என்றும் இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.