சேலம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடை நிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணிகளுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கு தகுதியானவர் களிடமிருந்து எழுத்து மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை நேரடியாக வோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப் பட்டுள்ளது. விண்ணப்பங்களை நாளை (6-ம் தேதி) மாலை 5 மணி வரை வழங்கலாம். மேலும், தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சேலம் கல்வி மாவட்டம் - deosalemedn@gmail.com, சேலம் ஊரகம் கல்வி மாவட்டம்- deosalemrural@gmail.com, சங்ககிரி கல்வி மாவட்டம் - deosankari@gmail.com, ஆத்தூர் கல்வி மாவட்டம் - atturdeo@gmail.com, எடப்பாடி கல்வி மாவட்டம் - deoedappadi2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.