வேலை வாய்ப்பு

தி.மலையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக் கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நாளை (24-ம் தேதி) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT