வேலை வாய்ப்பு

பிரதமரின் தேசிய தொழிற்பயிற்சி முகாம் -  நாடு முழுவதும் 200 இடங்களில் நடந்தது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமரின் தேசிய தொழிற்பயிற்சி முகாம் நேற்று (ஜுன் 13) நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், பெருநிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பாக, மாதந்தோறும் பிரதமரின் தேசிய தொழிற்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

ஜுன் 13 2022 (நேற்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடைபெற்றது. 36-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தருவதற்காக தொழிற்பயிற்சி முகாமில் பங்கேற்றன. 5 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற சான்றிதழ், திறன் பயிற்சி சான்றிதழ், தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ பயின்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொன்றனர். வெல்டர்கள், எலக்ட்ரீஷியன், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT