வேலை வாய்ப்பு

சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் நிறுவன பணிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜூன் 10) சென்னையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு; தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் 2 மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் நாளை (ஜூன் 10) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 வரை நடைபெற உள்ளது

இதில் 30 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT