வேலை வாய்ப்பு

சென்னையில் ஜுன் 5-ல் வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆட்சியர் எஸ்.அமிர்த ஜோதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 5-ம் தேதி திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையிலும், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் கலந்துகொள்ளலாம். பங்கேற்க வருவோர் தங்கள் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ, ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். பணிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும். முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம்.

SCROLL FOR NEXT