வேலை வாய்ப்பு

குருப்-2 தேர்வு ‘கீ ஆன்சர்’ வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்-2 மற்றும் குருப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 21-ம் தேதி நடந்தது.

இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிட்டது. உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபம், கோரிக்கைகள் இருப்பின் அதுதொடர்பாக விவரங்களை ஜுன் 3-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT