சென்னை: ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறும்போது, “ஜூலை 24-ஆம் தேதி காலை 9,30 மணி முதல் 12.00 மணிவரை டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெறும். மொத்தம் 300 மதிபெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு மூன்று மணி நடைபெறும். 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களின் பெயர் தரவரிசை பட்டியலில் இடம்பெறும். 7832 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.
குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வுக்கு விண்ணபிக்க ஏப்ரல் 24-ஆம் தேதி கடைசி நாளாகும். இதில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறவுள்ளது.
ஜூலை 24-ல் நடக்கும் குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.