வேலை வாய்ப்பு

கடலூரில் வரும் 26-ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 26-ம் தேதி காலை 9மணி முதல் 2 மணி வரை நடத்தவுள்ளது.

இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங் கள் கலந்து கொண்டு 5,000-க்கும்மேற்பட்ட காலிப்பணியிடங்க ளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் "www.tnprivatejobs.tn.gov.in" என்ற இணைய தளத்தில் பதிவுசெய்து முகாமில் கலந்து கொள்ள லாம். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான் றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புடன்(Bio-Data) முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04142-290039, 9499055909 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக் கான பதிவும் இம்முகாமில் நடைபெறவுள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT