வேலை வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டி மையம் தொடக்கம்

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டையில் புதிதாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொடங்கப் பட்டுள்ளது என ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர்பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டையில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகம், எண்;9, பழைய பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் வளாகம், ஆற்காடு சாலை, ராணிப்பேட்டை என்றமுகவரியில் இயங்கி வருகிறது.

எனவே, மாவட்டத்தைச்சேர்ந்த இளைஞர்கள் இந்த மையத்தை அணுகி புதிய பதிவு, பதிவு புதுப்பித்தல், கூடுதல் தகுதியை பதிவு செய்யவும், உதவித்தொகை பெறவும் இலவச போட்டித் தேர்வு பயிற்சிகளிலும் பங் கேற்க பயன்படுத்திக்கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT