நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டத்தின் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் நாளை (டிச.18) நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம்.
முகாமுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என நாகை ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.