திண்டுக்கல்லில் பிப்ரவரி 25-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 25-ல் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் ஜான்பால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில், 100-க்கும் மேற்பட்ட வேலை
யளிப்போர் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்
ளனர். ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2,ஐ.டி.ஐ., கணினி தகுதி, ஓட்டுனர்உள்ளிட்ட பல்வேறு கல்வித்
தகுதிகளை உடையவர்கள் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.
முகாமில் வேலைவாய்ப்பு மையத்தில் ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அயல் நாட்டில் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளும், சுய வேலைவாய்ப்பு கடனுதவி திட்டங்கள் குறித்தும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள், தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம், அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், என திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.