வேலை வாய்ப்பு

ஐசிஎஃப் சென்னையில் அப்ரெண்டிஸ் பயிற்சி: 1000 காலியிடங்கள்; 10-ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

செய்திப்பிரிவு

இந்திய ரயில்வே துறையின் ஐசிஎஃப் சென்னை பிரிவில் அப்ரெண்டிஸ் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.

குறிப்பாக கார்பென்டர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், பெயிண்டர், வெல்டர் உள்ளிட்ட பணிகளுக்கான பயிற்சியை சென்னை ஐசிஎஃப் வழங்குகிறது. இது ஊதியத்துடன் கூடிய பயிற்சி மட்டுமே. நிரந்தரப் பணியல்ல.

என்னென்ன தகுதிகள்?

வயது வரம்பு: 01.10.2010 அன்று 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் தளர்வும் எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் தளர்வும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களோடு 10-ம் வகுப்புத் தேர்ச்சி
எம்எல்டி பயிற்சிக்கு 12-ம் வகுப்புத் தேர்ச்சி அவசியம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண்களுக்குக் கட்டணம் இல்லை.

காலியிடங்கள்
1,000

பயிற்சி ஊதியம்

புதியவர்கள் (10-ம் வகுப்பு)- மாதம் ரூ.6000
புதியவர்கள் (12-ம் வகுப்பு)- மாதம் ரூ.7000
முன்னாள் ஐடிஐக்கள்- மாதம் ரூ.7000

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.09.2020

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் https://pbicf.in/app2020/actapp2020_apply.php என்ற இணையதள முகவரி மூலமும் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகே விண்ணப்பிக்க முடியும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://pbicf.in/app2020/notification.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து படிக்கலாம்.

தொடர்புக்கு: 044-26147708 (வேலை நேரத்தில் மட்டும்)

SCROLL FOR NEXT