தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 30-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பதிவாளர் இன்று (நவ.25) வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம், வரும் நவ.30-ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் முப்பதுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர்கள், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் (www.tnou.ac.in), கல்வி சான்றிதழ்கள் (உண்மை மற்றும் நகல்), மார்பளவு நிழற்படம் (இரண்டு), நிழற்பட அடையாள அட்டை/ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
மேலும் தொடர்புக்கு, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரெ.மகேந்திரனை தொடர்புகொள்ளலாம். தொலைபேசி: 04424306611, செல்போன்: 9487700180, மின்னஞ்சல், tnousw@gmail.com, இணையதளம்: www.tnou.ac.in," என தெரிவிக்கப்பட்டுள்ளது.