சென்னை: பெண்களுக்காக ஃப்ரைடல் மேக்கப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்ற பல்வேறு வகையான மேக்கப் நுட்பங்கள் அடங்கிய தொழில்முறை ஒப்பனை பயிற்சி வகுப்பு சென்னையில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை.
அந்தவகையில் பிரைடல், ஃபேஷன், ஹெச்.டி.மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின்கேர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்ற அனைத்து வகையான மேக்கப்களையும் ஒரே இடத்தில் கற்பதற்கான முழுமையான தொழில்முறை ஒப்பனை பயிற்சி வகுப்பு (ப்ரோ மேக்கப் மாஸ்டர்கிளாஸ்), சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் அக்.10 முதல் 12-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இதில் மேம்பட்ட மேக்கப்பின் நுட்பங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப், ஃபேஷன் மற்றும் எடிட்டோரியல், நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கான ப்ரைடல் (மணமகள்) மேக்கப், கிளாஸ் ஸ்கின் மேக்கப், வியர்வை தடுக்கும் மேக்கப், முகதிருத்தம், சரும பாரமரிப்பு, கண்களுக்கான மேம்படுத்தப்பட்ட மேக்கப், ஐ-ஷேடோ வரைவதற்கான நுட்பங்கள், புருவ அலங்காரம், தலைமுடி அலங்காரம், புடவை அணிதல் (மடிப்புகள்), ஹெச்.டி, 3டி, 4டி வகை மேக்கப்களின் நுட்பங்கள், தொழில் வளர்ச்சிக்காக போர்ட் ஃபோலியோ உருவாக்கம், செயல்முறை பயிற்சி உள்ளிட்டவை குறித்து கற்றுத்தரப்படும்.
பயிற்சியானது காலை 10 முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்திலும், 9543773337, 9360221280 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு அரசு சான்றிதழும் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.