சென்னை: இந்திய ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு பேரணி, பிப்.5 முதல் 15-ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின்கீழ் பல்வேறு நுழைவுகளுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி, வரும் பிப்.5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்த பேரணிக்கு வரும் பங்கேற்பாளர்கள் அனுமதி அட்டை, கல்வி சான்றிதழ்கள், காவல்துறையிடம் பெற்ற நற்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், 20 புகைப்படங்கள், பேன் அட்டை, ஆதார் ஆட்டை ஆகிய ஆவணங்களுடன் பங்கேற்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார். ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.joininindianarmy.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.