கோப்புப் படம் 
வேலை வாய்ப்பு

சென்னையில் டிச.27-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் டிச.27-ம் தேதி நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில், வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெற சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில் 8, 10, 12-ம் வகுப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பபிரிவில் ஏதாவது ஒரு பட்டம், ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து முகாமில் பங்கேற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT