திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் நவ. 16-ம் தேதி திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், இருநூறுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளன. இந்நிலையில், இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது. அந்த பிரச்சார வாகனத்தின் பயணத்தை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.