வேலை வாய்ப்பு

உதவி வனப் பாதுவலர் பணிக்கு ஜூன் 13-ல் நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், உடற்தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். தபால் மூலமாக தகவல் ஏதும் அனுப்பப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குருப்-1 ஏ தேர்வு மூலமாக தமிழக அரசின் வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர் பணியில் சேருவோர் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஎஃப்எஸ் (இந்திய வனப்பணி) அதிகாரி ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT