கோப்புப்படம் 
வேலை வாய்ப்பு

பொறியியல் பணி தேர்வுக்கு ஏப்.3 முதல் கலந்தாய்வு

செய்திப்பிரிவு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஏப்ரல் 3 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளின் கீழ்வரும் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த27.5.2023 அன்று டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் 19.9.2023 அன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது, நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஏப்ரல் 3 முதல் 10-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். தபால் மூலமாக எந்த தகவலும் அனுப்பப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT