வேலை வாய்ப்பு

3,359 காவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், 3,359 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

இதில், 783 பெண்களும், 2,576 இளைஞர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த பணியிடங்களில் 2,599 காலி பணி இடங்கள் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 780 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைத் துறையில் மொத்தம் 86 காலி பணியிடங்களும், தீயணைப்புத்துறைக்கு 674 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட 2,599 பணியிடங்களில் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1,819 பேரும், மாநகர மற்றும் மாவட்ட ஆயுதப்படைக்கு 780 பேரும் தேர்வு செய்யப்பட உள்ள
னர். வரும் 18-ம் தேதி முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 17-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT