துபாய் கோல்ட் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள தங்கச் சாலை திட்டத்தின் வரைப்படம்.

 
வணிகம்

துபாய் நகைக் கடை பகுதியில் உலகின் முதல் தங்கச் சாலை

செய்திப்பிரிவு

துபாய்: தங்​கம் விலை பவுன் ரூ.1.24 லட்​சத்தை தாண்டி விற்​பனை​யாகி கொண்​டிருக்​கிறது. இந்​நிலை​யில் துபா​யில் கோல்ட் மாவட்​டத்​தில் நகைக் கடைகள் இருக்​கும் பகு​தி​யில் தங்​க சாலை அமைக்​கும் திட்​டம் பற்றி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள துபாய் கோல்ட் மாவட்​டம் கோல்ட் சவுக் பகு​தி​யில் 1,000-க்​கும் மேற்​பட்ட தங்க நகைக் கடைகள் அமைந்​துள்​ளன. இதன் அரு​கில் உள்ள தியரா பகு​தி​யிலும் தங்​கம் தொடர்​பான வர்த்​தகம்​தான் நடை​பெறுகிறது. துபாய் வர்த்​தகம் மற்​றும் பாரம்​பரி​யத்​தில் தங்​கம் முக்​கிய பங்கு வகிக்​கிறது.

          

கடந்த 2024-25-ம் நிதி​யாண்டில் ஐக்​கிய அரபு அமீரகம் 53.41 பில்​லியன் அமெரிக்க டாலர் (ரூ.4 லட்​சத்து 84 ஆயிரம் கோடி) மதிப்​பிலான தங்க நகைகளை ஏற்​றுமதி செய்​துள்​ளது. இது தவிர முதலீடு சேவை​கள் நிறு​வனங்​கள் மற்​றும் ஆடம்பர பொருட்​கள் விற்​பனை​யும் இங்கு நடை​பெறுகிறது.

இந்​தி​யா, சுவிட்​சர்​லாந்​து, இங்​கிலாந்​து, ஹாங்​காங், துருக்கி உட்பட உலகின் பல நாடு​களில் இருந்து தங்​கநகை வியா​பாரி​களும், சுற்​றுலாப் பயணி​களும் வந்து செல்​லும் இப்​பகு​தி​யில் தங்​கத்​தில் சாலை அமைக்​கும் திட்​டத்தை துபாய் அதி​காரி​கள் அறி​வித்​துள்​ளனர். சர்​வ​தேச பார்​வை​யாளர்​கள், முதலீட்​டாளர்​களை ஈர்ப்​ப​தற்​காக இத்திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சாலை அமைப்​ப​தற்​கான கட்​டு​மான விவரங்​கள், காலக்​கெடு ஆகியவை படிப்​படி​யாக அறிவி​க்​கப்​பட​வுள்​ளன. இங்​கு தங்​கச் ​சாலை அமைக்​கப்​பட்​​டால்​, இது உலகின்​ முதல்​ தங்​கச்​ ​சாலை​யாக இருக்​கும்​.

SCROLL FOR NEXT