பிரநிதித்துவப் படம்

 
வணிகம்

பெண்கள் குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்க ஜூன் 13-ல் இலவச ஆன்லைன் பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் சார்பில் இலவச ஆன்லைன் கருத்தரங்கம் மற்றும் தொழில் பயிற்சி ஜூன் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கத் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவர் நலச் சங்கம் நேரடி தொழில் பயிற்சிகளையும், ஆன்லைன் பயிற்சிகளையும் மகளிர் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

கரோனா காலகட்டத்தில் நேரடியாக தொழில் பயிற்சி அளிக்க முடியாத காரணத்தினால் தமிழகம் முழுவதும் ஏராளமான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் வாரத்திற்கு இரண்டு சனி, ஞாயிறுகளில் நடத்தப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அதன் வழியாக தொழிலை மேற்கொண்டு இன்று சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது மாதத்தில் இரு சனிக்கிழமைகள் சிறு பயிற்சி ஒன்றுடன் கூடிய கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது.

இந்த தொழில் பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் கட்டணம் இன்றி தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இந்த தொழில் பயிற்சியில் கலந்து கொள்ளும் மகளிர்கள் கட்டணம் இன்றி தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

இவர்களுக்கு கட்டணம் இன்றி நேரடி பயிற்சிகள், பான் கார்டு பதிவு, எஃப்எஸ்எஸ்ஐ பதிவு மற்றும் அரசு தொழில் பதிவுகள் ஜிஎஸ்டி சார்ந்த விபரங்கள், வங்கி கடன் உதவி வழிகாட்டுதல்கள், மத்திய மாநில அரசு திட்டங்கள், அரசின் மானிய விபரங்கள், வழிகாட்டுதல்கள், கட்டணமில்லா ஸ்டால்கள் அமைக்கும் உதவிகள் மாதம் இரு பயிற்சிகள் போன்றவை எந்தவித கட்டணமும் இன்றி வழிகாட்டுதலும் ஏற்படுத்தியும் செய்து தரப்படும்.

இதன் அடிப்படையில் இரண்டாம் சனிக்கிழமை (13.06.2026) மதியம் 3 மணிக்கு மகளிருக்காக ரூ.10000-த்தில் ஐந்து தொழில் தொடங்கி சிறப்பாக நடத்துவது எப்படி என்பது பற்றியும், இன்றைய காலகட்டத்தில் தொழில் முனைவை வெற்றி பெறச் செய்யும் விபரங்கள் பற்றியும், அரசின் தொழில் திட்டம் ஒன்றும் மற்றும் வாசனை மெழுகுவர்த்தி அலங்காரம், மெழுகுவர்த்தி செய்வது பற்றிய பயிற்சி, அதைப் பற்றிய அனைத்து தெளிவான விபரங்கள் போன்றவை தேர்ச்சி பெற்ற பயிற்சியாளரால் நடைபெறும் வரும் மாதங்களில் இரண்டாவது சனிக்கிழமையும், நான்காவது சனிக்கிழமையும் இந்த ஆன்லைன் கருத்தரங்குகள் மகளிர் தொழில் முனைவுக்காக நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் கிடையாது.

zoom.wewatn.com என்ற இணைப்பின் பின் வழியாக இணைந்து கொண்டு பயன் பெறலாம். இந்த கருத்தரங்கில் வழிகாட்டக்கூடிய அனைத்து வல்லுனர்களும் அவர்கள் துறையில் சிறந்த முறையில் செயல்படக் கூடியவர்கள், ஆகையால் இந்த லிங்கில் சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு இணைந்து கருத்தரங்கில் கூறப்படும் அனைத்து தொழில் சார்ந்த முனைவுகளை மகளிர் கற்று அறிந்து பயன்பட தமிழ்நாடு மகளிர் தொழில் முனை ஒரு நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT