வணிகம்

கார்பன் கிரெடிட் மூலம் ரூ.50 கோடி வருவாய் ஈட்ட வஉசி துறைமுகம் திட்டம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்​துக்​குடி வஉசி துறைமுகம் கார்​பன் கிரெடிட் திட்​டத்​தின் மூலம் 10 ஆண்​டு​களில் ரூ.50 கோடி வரு​வாய் ஈட்ட திட்​ட​மிட்​டுள்​ளது.

இது தொடர்​பாக துறை​முக ஆணை​யத் தலை​வர் சுசாந்த குமார் புரோஹித் வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பு: தூத்​துக்​குடி வஉசி துறை​முக ஆணையம் தனது புதுப்​பிக்​கத்தக்க ஆற்​றல் திட்​டங்​களில் இருந்து கார்பன் கிரெடிட்​டு​களை உரு​வாக்​கும் பணியை அதி​காரப்​பூர்​வ​மாக தொடங்​கி​யுள்​ளது.

          

இந்த திட்​டத்​தின் கீழ் துறை​முகம் 5 முக்​கிய​மான புதுப்​பிக்​கத்​தக்க ஆற்​றல் திட்​டங்​களை வெற்​றிகர​மாக பதிவு செய்துள்​ளது. இத்​திட்​டங்​களின் மொத்த மின்​சார உற்​பத்தி திறன் 12.4 மெகா​வாட் ஆகும்.

இந்த திட்​டத் தொகுப்​பில் 400 கிலோவாட் மேற்​கூரை சூரியமின் ஆற்​றல் அமைப்​பு, அதனுடன் 1 மெகா​வாட் மற்​றும் 2 மெகா​வாட் தரைத்தள சூரிய மின்​நிலை​யங்​கள், மேலும் 6.3 மெகா​வாட் மற்​றும் 2.7 மெகா​வாட் திறன் கொண்ட காற்​றாலை மின் திட்​டங்​களும் அடங்​கு​கின்​றன.

அடுத்த பத்து ஆண்​டு​களில், இந்த திட்டங்​கள் மூலம் சுமார் 19,483 கார்​பன் கிரெடிட்கள் உரு​வாகும் என்று கணிக்​கப்​படு​கிறது. இந்த கார்​பன் கிரெடிட்கள் மூலம் தற்​போதைய சந்தை நில​வரத்​தின் அடிப்​படை​யில் வஉசி துறை​முகம் சுமார் ரூ.50 கோடி வரு​வாய் பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதன் மூலம் உலகளா​விய கார்​பன் சந்தைகளை திறமை​யாக பயன்​படுத்​தி, நிலைத்தன்மை முதலீடு​களில் உள்ள அபா​யத்தை குறைத்​து, அதன்மூலம் லாபம் பெறும் துறைமுகமாக விளங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT