வணிகம்

வேதாந்தா நிறு​வனத்​தின் லாபம் 60% உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை வேதாந்தா நிறு​வனம், 31 டிசம்​பர் 2025 அன்று முடிவடைந்த 2025–26 நிதி​யாண்​டின் மூன்​றாம் காலாண்டு மற்​றும் ஒன்​பது மாதங்​களுக்கு உரிய, தணிக்கை செய்யப்ப​டாத ஒருங்​கிணைந்த நிதி முடிவு​களை நேற்று வெளியிட்டது.

இதன்​படி, இந்​நிறு​வனத்​தின் 3-ம் காலாண்டு வரு​வாய் ரூ.45,899 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இது கடந்த நிதி​யாண்​டின் 3-ம் காலாண்டை விட 19% அதி​கம். இது​போல வரிக்கு பிந்​தைய லாபம் 60% உயர்ந்து ₹7,807 கோடி​யாக அதிகரித்துள்​ளது.

இந்​நிறு​வனத்​தின் நிதி​நிலை குறிப்​பிடத்​தக்க அளவில் மேம்​பட்​டுள்​ளது. மொத்த கடனில் இருந்து EBITDA விகிதம் 1.40 மடங்​கி​லிருந்து 1.23 மடங்​காக குறைந்​துள்​ளது. மூலதன முதலீட்​டின் மீதான வரு​மான விகிதம் 27 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. 2025–26 நிதி​யாண்​டின் முதல் 9 மாதங்களில், வேதாந்தா நிறு​வனம் வளர்ச்சி திட்டங்களுக்காக சுமார் ரூ.11,953 கோடியை முதலீடு செய்துள்​ளது.

          
SCROLL FOR NEXT