வேதாந்தா தலைவர் அனில் அகர்​வால்

 
வணிகம்

இந்தியா உற்பத்தி செய்வதை உலக நாடுகள் விரும்பவில்லை: வேதாந்தா தலைவர் அனில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வேதாந்தா குழு​ம தலை​வர் அனில் அகர்​வால் கூறியதாவது: "இந்​தியா உற்​பத்தி செய்​வதை உலக நாடு​கள் விரும்​ப​வில்​லை. ஆனால், உள்​நாட்டு உற்​பத்தி மட்​டுமே வேலை ​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் என்​பது உலகின் பிற பகு​தி​களில் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தியா உற்​பத்தி துறை​யில் முன்​னேறு​வதை எதிர்க்​கும் சக்திகளை தடுத்​துப் போராட வேண்​டும். ஒரு காலத்​தில் உணவுக்காக இறக்​கும​தியை நம்​பி​யிருந்த நாடு, இன்று அதில் தன்னிறைவு பெற்​றுள்​ளது. அரசு உரு​வாக்​கிய ஒரு மக்​கள் இயக்கத்​தால் மட்டுமே இது சாத்​தி​ய​மானது.

இது​போல இப்​போது இந்​தியா தனது கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு தேவை​யில் 90 சதவீதத்தை இறக்​குமதி செய்​வ​தால் பலவீன​மான நிலை​யில் உள்​ளது. எனவே, உள்​நாட்டு உற்பத்தியை அதி​கரிப்​ப​தைத் தவிர வேறு வழி​யில்​லை. இந்தியாவுக்​குத் தேவை​யான வளங்​களும், திறமை​யான தொழில்​ முனைவோர்களும் உள்​ளனர். நமக்​குத் தேவை​யானது விரி​வான ஆய்​வு​கள் மட்​டுமே. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

          
SCROLL FOR NEXT