வணிகம்

இந்தியாவின் 4 நிறுவனங்கள், 3 தனிநபர் மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்வதாகக் கூறி...

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: போர் நிறுத்​தம் கடந்த வாரத்​தில் முடிவடைந்த நிலை​யில், ஈரானுக்கு எதி​ராக அமெரிக்கா வர்த்தக போரை அறிவித்​துள்​ளது. இதன்​படி, ஈரானுக்கு செல்​லும் நிதி ஆதாரங்களை முடக்​கும் நோக்​கத்​துடன், ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்​காஸ்ட்’ என்ற புதிய நடவடிக்​கையை அமெரிக்கா தொடங்கியுள்​ளது.

இதன் கீழ், ஈரானுடன் பெட்​ரோலி​யம் மற்​றும் பெட்ரோ கெமிக்​கல் வர்த்​தகத்​தில் ஈடு​பட்​ட​தாகக் கூறி, 4 இந்​திய நிறு​வனங்​கள் மற்றும் 3 இந்​தி​யர்​கள் மீது அமெரிக்க நிதித்​துறை கடுமை​யான பொருளா​தா​ரத் தடைகளை விதித்​துள்​ளது.

ஈரானை சேர்ந்த பல்​வேறு நிறு​வனங்​களிட​மிருந்து பெட்​ரோலியப் பொருட்​களை இறக்​குமதி செய்​ததற்​காக ‘சதாசிவா ஓவர்​சீஸ்’, ‘பிபி சாஃப்ட்​டெக்’, ‘பிரக்​ருடீஸ் இன்ப்ரா இம்​பெக்ஸ் இந்​தி​யா’ ஆகிய நிறு​வனங்கள் மீது அமெரிக்கா பொருளா​தா​ரத் தடைகளை விதித்​துள்​ளது. அதே​போல, சுங்​கத் தரக​ராகச் செயல்​பட்​டு, ஈரானிய பெட்ரோ கெமிக்​கல் பொருட்​களை இந்​தி​யா​வுக்கு இறக்​குமதி செய்ய உதவியதற்​காக ‘போர்ட்​ஈசி பார்ட்​னர்ஸ் எல்​எல்​பி’ என்ற நிறு​வனம் மீதும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுத​விர ‘போர்ட்​ஈசி பார்ட்​னர்ஸ் எல்​எல்​பி’ நிறு​வனத்​தின் முதலீட்​டாளர்​களான ஹரிஷ் ராமச்​சந்​திர ரங்கி மற்​றும் இத்​ரிஸ்​மியா அஷ்ரப்​மியா ஷேக், ‘பிரக்​ருடீஸ் இன்ப்ரா இம்​பெக்ஸ் இந்​தி​யா’ நிறு​வனத்​தின் இயக்​குநர் ரஷாந்த் கார்க் ஆகிய 3 பேர் மீதும் பொருளா​தார தடை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமெரிக்க நிதித்​துறை மொத்​தம் 60 தனி​நபர்​கள், நிறு​வனங்​கள் மற்​றும் கப்​பல்​களுக்கு தடைகள் விதித்​துள்​ளது என்​பதும், இதில் சீனா மற்​றும் ஹாங்​காங்​கைச் சேர்ந்த சுமார் 20 நிறு​வனங்​களும், சீனாவைச் சேர்ந்த 4 தனி​நபர்​களும் இடம்​பெற்​றுள்​ளனர்​ என்பதும்​ குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT