வணிகம்

கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்கும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கப்​பல் கட்​டு​மானத்​தில் உலகளா​விய மைய​மாக இந்தியா உரு​வெடுக்​கும் என மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்நாத் சிங் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய கப்​பல் கட்​டும் தளங்​களின் திறனை வெளிப்​படுத்​தும் வகை​யில், ராணுவ தளவாட உற்​பத்​தித் துறை சார்​பில் டெல்லியில் நேற்று கருத்​தரங்கு நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது:

இந்​தி​யா​வில் உள்ள அரசு மற்​றும் தனி​யார் கப்​பல் கட்​டும் தளங்கள், ஆயிரக்​கணக்​கான குறு, சிறு மற்​றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதர​வுடன் செயல்​படு​கின்​றன.

இவை, எஃகு, இயக்க அமைப்​பு​கள், மின்​னணு சாதனங்​கள், உணர் கருவி​கள் மற்​றும் மேம்​பட்ட போர்​முறை அமைப்​பு​கள் வரை​யில் ஒரு வலு​வான தொடர்பை உரு​வாக்கி செயல்​படு​கின்​றன. இந்​திய கப்​பல் கட்​டும் தளங்​கள் ஏற்​கெனவே விமானம் தாங்கி கப்​பல்​கள், ஆராய்ச்சி கப்​பல்​கள் மற்​றும் வணி​கக் கப்​பல்​களை தயாரித்துள்​ளன. இந்​திய கடற்​படை மற்​றும் கடலோர காவல்படை​யில் உள்ள கப்​பல்​கள் உள்​நாட்​டில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

எனவே, கப்​பல் கட்​டு​மானம், பழுது​பார்த்​தல் மற்​றும் கடல்​சார் கண்​டு​பிடிப்​பு​களுக்​கான உலகளா​விய மைய​மாக உரு​வெடுக்​கும் ஆற்​றல் இந்​தி​யா​வுக்கு உள்​ளது. இந்​தி​யா​வின் கப்​பல் கட்டுமானத்துறை​யின் திறனை உலக நாடு​கள் பயன்படுத்திக்கொள்​ள முன்​வர வேண்​டும்​. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT