வணிகம்

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் மார்ச் 2027-க்குள் தடையற்ற சுங்கக் கட்டண முறை

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

செய்திப்பிரிவு

மும்பை: இந்​தியா முழு​வதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்​போது நடை​முறை​யிலுள்ள பாஸ்​டேக் முறை​யின்​படி வாக​னங்​கள் வரிசை​யில் நின்​று, தடுப்​பு​கள் திறந்த பிறகே செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற போக்​கு​வரத்து நெரிசலும், எரிபொருள் மற்​றும் நேர விரய​மும் ஏற்​படு​கின்​றன.

இந்​தப் பிரச்​சினைக்கு நிரந்​தரத் தீர்​வாக, வாக​னங்​கள் எங்​கும் நிற்​காமல் தங்​களின் வழக்​க​மான வேகத்​திலேயே கடந்து செல்லும் வகை​யில் தடையற்ற சுங்​கக் கட்டண முறையை நடைமுறைக்கு கொண்டு வர மத்​திய அரசு தீவிர​மாக பணியாற்றி வருகிறது.

இந்​நிலை​யில், மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற குளோபல் ஃபின்​டெக் விழா​வில் மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி பேசி​ய​தாவது: ஓராண்​டில், பலவழி தடையற்ற போக்​கு​வரத்து மாதிரி​யின் கீழ் நமது அனைத்து சுங்​கச்​சாவடிகளி​லும் தடையற்ற சுங்​கக் கட்டண முறையை செயல்​படுத்த விரும்​பு​கிறோம். டிசம்​பர் 2026-க்​குள் இதை முடிக்​கு​மாறு அதி​காரி​களுக்கு நான் உத்​தர​விட்​டுள்​ளேன்.

அதன்​படி இந்த ஆண்​டின் இறு​திக்​குள் 60 முதல் 70 சதவீதப் பணிகள் நிறைவடை​யும் என்று நான் நம்​பு​கிறேன். 2027 மார்ச் மாதத்​திற்​குள், நாடு முழு​வதும் தடையற்ற சுங்​கச்​சாவடி அமைப்பு செயல்​படுத்​தப்​படும். சுங்​கச்​சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைவ​தால் ஆண்​டுக்கு சுமார் 71 கோடி மணி நேர​மும், 56 கோடி லிட்​டர் எரிபொருளும் சேமிக்​கப்​படும்.

எரிபொருளின் மதிப்பு ஏறத்​தாழ ரூ.5,250 கோடி​யாக​வும், பயணிகள் மிச்​சப்​படுத்​தும் நேரத்​தின் பொருளா​தார மதிப்பு ரூ. 68,500 கோடி​யாக​வும் இருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த திட்​டத்​தால் சுங்​கச்​சாவடி இயக்க செலவு 2% முதல் 4% ஆக குறையும். இது ஆண்டுக்கு ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை சேமிக்க உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT