பி.கோ​பாலகிருஷ்ணன்

 
வணிகம்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதி வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் - இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு நம்பிக்கை

செய்திப்பிரிவு

கரூர்: இந்​தி​ய-அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தம் நாட்​டின் ஏற்​றுமதி வளர்ச்​சிக்கு வலு​வான உத்​வேகத்தை அளிக்​கும் என்று இந்​திய ஏற்​றுமதி நிறு​வனங்​கள் கூட்​டமைப்பு நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக கூட்​டமைப்​பின் தெற்கு மண்​டலத் தலை​வரும், கரூர் ஜவுளி உற்​பத்​தி​யாளர்​கள், ஏற்​றும​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வரு​மான பி.கோ​பால​கிருஷ்ணன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய- அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​தில், இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​கள் மீதான வரி​களை 18 சதவீத​மாக குறைக்க அமெரிக்கா ஒப்​புக்​ கொண்​டுள்​ளது.

          

இந்த வளர்ச்சி இரு தரப்பு வர்த்தக உறவு​களை வலுப்​படுத்​து​வ​தி​லும், அமெரிக்க சந்​தை​யில் இந்​திய ஏற்​றும​தி​களின் போட்​டித் தன்​மையை கணிச​மாக அதி​கரிப்​ப​தி​லும் மைல் கல்​லாக இருக்​கும்.

இந்​தி​ய-அமெரிக்கா நாடு​களிடையே வளர்ந்து வரும் உறவு மற்​றும் பொருளா​தார கூட்​டாண்​மை​யைப் பிர​திபலிக்​கும் இந்த ஒப்​பந்​தத்தை முழு மனதுடன் வரவேற்​கிறோம்.

இது இந்​திய எம்​எஸ்​எம்இ ஏற்​றும​தி​யாளர்​களுக்கு மாற்​ற​மாக அமை​யும். இந்த வரிக்​குறைப்​பால் பொறி​யியல் பொருட்​கள், ஜவுளி, மருந்​து, ரசாயனம், தோல்பொருள், ரத்​தினக் கற்​கள், நகைகள், விவ​சாயப் பொருட்​கள் போன்ற முக்​கிய ஏற்​றுமதி துறை​களுக்கு பயனளிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

குறைந்தவரிக் கொள்​கை, போட்​டித் தன்​மையை மேம்​படுத்​தும். மேலும், இந்த ஒப்​பந்​தம், முன்​னர் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த ஆர்​டர்​களை உடனடி​யாக வெளி​யிட வழி வகுக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​திய வளர்ச்​சித் திறன் விரி​வாக்​கம், புதிய முதலீடு​கள், ஏற்​றுமதி சார்ந்த தொழில்​களில் பெரிய அளவி​லான வேலை​வாய்ப்புகளை உரு​வாக்கும்.

தமிழகத்​தில் உள்ள ஜவுளி மையங்​கள், குறிப்​பாக கரூர், திருப்​பூர், கோவை, ஈரோடு ஆகிய பகு​தி​கள் இந்த வர்த்தக ஒப்​பந்​தத்​தால் கிடைக்​கும் வாய்ப்​பு​களை பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். இந்த ஒப்​பந்​தம் வரும் மாதங்​களில் இந்​தி​யா​வின் ஏற்​றுமதி வளர்ச்​சிக்கு வலு​வான உத்​வேகத்தை அளிக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT