வணிகம்

ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: அரிசி, பருப்பு இறக்குமதிக்கு வரிச் சலுகை இல்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐரோப்​பிய கூட்​டமைப்​புடன் இந்​தியா மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​தில் பால், அரிசி, கோதுமை உள்​ளிட்ட பொருட்​களின் இறக்​கும​திக்கு வரிச் சலுகை அளிக்​க​வில்லை என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

இது குறித்து மத்​திய வர்த்தக அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஐரோப்​பிய கூட்​டமைப்​புட​னான இந்தியா மேற்​கொண்​டுள்ள இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்​தின் கீழ், நாட்​டின் சென்​சிட்​டிவ் துறை​களாகக் கருதப்படும் பால்​பொருட்​கள், அரிசி, கோது​மை, பருப்பு வகைகள், தேயிலை, காபி ஆகிய​வற்​றுக்கு முழு​மை​யான பாதுகாப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

          

இந்​தப் பொருட்​களுக்​கான இறக்​குமதி வரி​யில் எவ்​விதக் குறைப்பும் செய்​யப்​பட​வில்​லை. இவற்​றுடன் மாட்​டிறைச்​சி, கோழி இறைச்​சி, மீன், கடல் உணவு​கள், பாலாடைக்​கட்​டி, சோளம், பழங்​கள், காய்​கறிகள், சமையல் எண்​ணெய், வாசனைப் பொருட்​கள், புகை​யிலை ஆகிய துறை​களுக்​கும் பாது​காப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது. சிறு, குறு விவ​சா​யிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்​கும் என்​ப​தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

இந்​தியா இது​வரை மேற்​கொண்ட எந்​தவொரு தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​தி​லும் பால் உற்​பத்​தித் துறைக்கு வரிச் சலுகைகளை வழங்​கிய​தில்​லை என்று அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT