வணிகம்

சுங்கச்சாவடி வசூல் - ஓராண்டுக்குள் எளிமைப்படுத்த திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி மக்​களவை​யில் கேள்வி நேரத்​தின்​போது கூறிய​தாவது: ”தேசிய நெடுஞ்​சாலைகளில் தற்​போதுள்ள சுங்​கச்​சாவடி கட்டண வசூல் முறை ஓராண்​டுக்​குள் முடிவுக்கு வரும். அதன்​பிறகு, எலக்ட்​ரானிக் முறை​யில் சுங்​கச்​சாவடி கட்​ட​ணங்​கள் வசூலிக்​கும் நடை​முறை செய​லாக்​கத்​துக்கு கொண்டு வரப்​படும்.

இதுதேசிய நெடுஞ்​சாலை​யில் பயணிப்​பவர்​களுக்கு எளி​தான​தாக​வும், தடையற்​ற​தாக​வும் இருக்​கும். இப்​பு​திய முறை முதலில் 10 இடங்​களில் நடை​முறைப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்​.

SCROLL FOR NEXT