தங்கம் விலை குறைவு 
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

தமிழினி

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,560-க்கு விற்பனையாகி வருகிறது.

அதோடு, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ 10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைவது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT