அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பியில் 600-க்கும் மேற்பட்ட செராமிக் டைல்ஸ் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
இந்த தொழிற்சாலைகளுக்கு புரோப்பேன் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை முக்கிய மூலப்பொருளாக விளங்குகின்றன. இந்நிலையில், ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரவேண்டிய சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால் புரோப்பேன் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்குத் தேவையான இயற்கை எரிவாயு மட்டுமே கையிருப்பில் உள்ளது. விநியோகம் விரைவில் சீராகவில்லை என்றால், தொழிற்சாலைகளை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது.