வணிகம்

டிசிஎஸ் சிஇஓ கிருத்திவாசனின் வருவாய் ரூ.28 கோடி - ஊழியர் ஊதியத்தை விட 333 மடங்கு அதிகம்!

செய்திப்பிரிவு

மும்பை: டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி​யும் (சிஇஓ) மேலாண் இயக்குநருமான கே.கிருத்​தி​வாசன், 2026-ம் நிதி​யாண்​டில் ரூ.28.1 கோடியை ஊதி​ய​மாகப் பெற்​றுள்​ளார்.

அந்​நிறு​வனத்​தின் வரு​டாந்​திர அறிக்​கை​யின்​படி, கிருத்​தி​வாசனின் ஊதி​யம் கடந்த நிதி​யாண்​டைக் காட்​டிலும் 6.3 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. முன்​னணி நிறு​வன​மான டிசிஎஸ், தனது ஒட்​டுமொத்த ஊழியர்​களின் எண்​ணிக்​கை​யில் 23,000-க்​கும் அதி​க​மானோரைக் குறைத்​துள்ள நிலை​யிலும், சிஇஓ-​வின் ஊதி​யம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

கடந்த 2025-ம் நிதி​யாண்​டின் இறு​தி​யில் 6,07,979 ஆக இருந்த டிசிஎஸ் ஊழியர்​களின் எண்​ணிக்​கை, 2026 நிதி​யாண்​டின் இறு​தி​யில் 5,84,519 ஆகக் குறைந்​துள்​ளது. 2026 நிதி​யாண்​டில் கிருத்​தி​வாசனின் மொத்த ஊதிய தொகுப்​பில், அடிப்​படைச் சம்​பள​மாக ரூ.1.67 கோடி​யும், இதர சலுகைகள் மற்​றும் படிகளாக ரூ.1.43 கோடி​யும் அடங்​கும்.

இதுத​விர, கமிஷன் தொகை​யாக மட்​டும் அவர் ரூ.25 கோடியைப் பெற்​றுள்​ளார். இதன் ​மூலம் அவரது மொத்த வரு​வாய் ரூ.28.1 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. மேலும், 2026 மார்ச் 31-ம் தேதி நில​வரப்​படி, கிருத்​தி​வாசன் டிசிஎஸ் நிறு​வனத்​தின் 11,232 பங்​கு​களைக் கைவசம் வைத்​துள்​ளார். நிறு​வன வரு​டாந்​திர அறிக்​கை​யின்​படி, அவரது இந்த ஊதி​ய​மானது டிசிஎஸ் ஊழியர்​களின் சராசரி ஊதி​யத்​தைக் காட்​டிலும் 332.8 மடங்​கு அதி​க​மாகும்​.

SCROLL FOR NEXT