புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, முக்கிய பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஜூன் 30-ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் நிவாரணம் அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை இது உறுதி செய்யும். பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துப் பொருட்கள், ரசாயனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் துறைகள் இந்த வரி விலக்கினால் பெரும் பயனடையும். இந்தத் தற்காலிக வரி விலக்கு காரணமாக அரசு கருவூலத்துக்கு சுமார் ரூ.1,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.